நுங்கு டெஸரட்
தேவையான பொருட்கள்:
நுங்கு – 15
பால் – ¼ கப்
சர்க்கரை – 8 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 3
செய்முறை:
முதலில் நுங்கின் தோலை உரித்துவிடவேண்டும்.
பின்னர் நுங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு விளிம்பு ஷார்ப்பாக உள்ள
டம்பளரின் மூலம் நுங்கை கொத்து பரோட்டா கொத்துவது போல கொத்தவேண்டும். நுங்கு
டைமண்ட் கல்கண்டு அளவிற்கு வரும்வரையில் கொத்தவேண்டும்.
பின்னர் இதில் கால் டம்பளர் பால், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து
கலக்க வேண்டும்.
இதை குளிர்சாதன பெட்டியில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளிர்ச்சியாக பரிமாற
நுங்கு டெஸரட் ரெடி!
இதன் விரிவான செய்முறை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.
No comments:
Post a Comment