Thursday, 23 July 2020

மணத்தக்காளி கீரை சூப்

மணத்தக்காளி கீரை சூப்

 

தேவையான பொருட்கள்:

மனத்தக்காளி கீரை – ஒரு கட்டு

தேங்காய்ப் பால் – ஒரு கிளாஸ்

அரசி கலைந்த தண்ணீர் – இரண்டு கிளாஸ்

தக்காளி – 1

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 5 பல்

மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

சீரகத்தை நன்கு பொரித்து வரும்போது பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.

இதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

பிறகு இதன் கூட கீரையை சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.

கீரை நன்கு வதங்கியதும் அரிசி கலைந்த நீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும், இதில் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

கீரை நன்கு வெந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகுத்தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது ஸ்டவ்வை ஆப் செய்து இரண்டு நிமிடங்கள் கழித்து சூடு ஆறியதும் தேங்காய் பாலை சேர்க்கவும்.

சுவையான மணத்தக்காளி சூப் ரெடி!

இதை அப்படியே சூப்பாகவும் சாப்பிடலாம், ரசத்திற்கு பதில் சூடான சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இதன் விரிவான செய்முறை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.



#மணத்தக்காளிகீரைசூப்    #ManathakkaliKeeraiSoup


No comments:

Post a Comment