சீரக சம்பா மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
மட்டன் –
¾ கிலோ
சீரக
சம்பா அரிசி - – ¾ கிலோ
தக்காளி – 4
பிரியாணி இலை – 3
பட்டை,கிராம்பு & ஏலக்காய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 6 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
அரைத்த தக்காளி விழுது – 2
பச்சை மிளகாய் – 8
வெங்காயம் – 4
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
அரைத்து வைத்த (இரண்டு)வெங்காய விழுது – ஒரு கப்
தயிர் – ½ கப்
செய்முறை:
மட்டனை குக்கரில் நான்கு விசில் வரும்
வரையில் வேகவைத்துக்கொள்ளவும்.
சீரக சம்பா அரிசியை இருபது நிமிடங்கள்
ஊற வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் 50ml ரீபைண்ட் ஆயில்,
50ml நெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை,கிராம்பு & ஏலக்காயை போட்டு
நன்கு பிரை ஆனதும் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதங்கும் பொழுது அரைத்து வைத்த வெங்காய விழுதையும் சேர்த்து கிளறி பின்னர் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
நறுக்கிய தக்காளி, அரைத்து வைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில்
நன்றாக கிளறி விடவும்.
பிறகு பாதியளவு புதினா, பச்சை மிளகாயை அரைத்து
சேர்க்கவும், இதனுடன் கொத்தமல்லி தழை புதினாவை சேர்க்கவும்.
இதில் வேக வைத்த மட்டனை சேர்த்து
மசாலாவுடன் நன்கு கிளறிவிடவும்.
மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடம்
கிளறி வதக்கவும்.
பின்னர் அரை கப் தயிரை சேர்த்து இரண்டு
நிமிடம் கிளறி வதக்கிவிடவும்.
ஒரு கப் அரிசிக்கு ஒன்றை கப் தண்ணீரை
சேர்க்கவும். தண்ணீருக்கு பதில் கறி வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல்
பயன்படுத்திக்கொண்டால் டேஸ்ட் நன்றாக இருக்கும், வேக வைத்த தண்ணீர் தேவையான அளவு
இல்லையெனில் மீதம் நல்ல தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் ஒரு முழு எலுமிச்சம்பழத்தின்
சாறினை சேர்த்து கலந்துவிட்டு ஊற வைத்த அரிசியை போட்டு இதையும் நன்கு கலந்து ஒரு
தட்டை போட்டு மூடி வைக்கவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து சாதம் நன்கு
தளதளவென்று கொதிக்கும் போது குக்கர் மூடியை நன்கு மூடி வெயிட் போட்டு அடுப்பை
சிம்மில் வைத்துவிடவும்.
எழு நிமிடங்கள் கழித்து குக்கரை
திறந்து பார்த்தால் சுவையான மட்டன் பிரியாணி ரெடி!
இதன் விரிவான செய்முறை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.
#மட்டன்பிரியாணி #MuttonBiryani
No comments:
Post a Comment