Wednesday, 22 July 2020

கடலைமாவு ‘கடப்பா’


கடலைமாவுகடப்பா

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பட்டை, கிராம்பு – 2
சோம்பு – ½  டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கருவேப்பில்லை – சிறிதளவு
தக்காளி – 2

செய்முறை:

தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து அதன் தோலை உரித்து கைகளால் நன்கு மசிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடலைமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இது திக்காகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் கலக்கவும்.
ஒரு கடாயை ஸ்டவில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவிட்டு பட்டை,கிராம்பு, சோம்பு போட்டு நன்கு பொரியவிட்டு இதில்ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, கருவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தை சேர்த்து ‘லேசாக’ வதக்கிக்கொள்ளவும். ரொம்பவும் வதக்கிட வேண்டாம்.

இதில் மசித்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து லேசாக வதக்கிக்கொள்ளவும், பின்னர் இதில் கரைத்து வைத்த கடலைமாவு கரைசலை ஊற்றி இரண்டு நிமிடங்கள் கலக்கவும்.

பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூளை சேர்த்து கலக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
கொதிக்க கொதிக்க கடலைமாவு திக்காக ஆகிவிடும். அப்போது மேலும் தண்ணீர் சேர்த்து நமக்கு தேவைப்படும் பக்குவத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கிவிடவும்.

இப்போது சூடான, சுவையான கடப்பா ரெடி!

இதை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

இதன் விரிவான செய்முறை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்




#கடலைமாவுகடப்பா  #GramFlourRecipe

No comments:

Post a Comment