மசாலா பாஸ்தா
தேவையான பொருட்கள்:
பாஸ்தா – 250 கிராம்
தக்காளி – 4
வெங்காயம் – 2
சர்க்கரை – 2 டீஸ்பூன்
பூண்டு – 7 பல்
மைதா – 2
காஸ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் -
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி
சிறிது உப்பு சேர்த்து பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணையை
சேர்த்துக்கொள்ளவும் பின்னர் அதில் பாஸ்தாவை போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து
எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தாக்காளி பேஸ்ட் செய்முறை:
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய தக்காளியை
வதக்கவும், இதில் மூன்று கஷ்மீரி மிளகாயை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு
வேகும் வரை இரண்டு நிமிடங்கள் கடாயை மூடி வைக்கவும்.
தக்காளி நன்கு வெந்தவுடன் ஆறியபின்னர்
மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது தக்காளி பேஸ்ட் ரெடி!
கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
விட்டு நன்கு சூடேறியதும் நன்கு பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்
அடுத்து பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து இரண்டும் பொன்னிறமாக
வரும் வரை வதக்கவும்.
பின்னர் இதில் இரண்டு டீஸ்பூன் மைதாவை
சேர்த்து கிளறவும். அடுத்து அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டை சேர்த்து இதுகூட
இரண்டு டீஸ்பூன் கஷ்மீரி மிளகயிதூளை சேர்த்து கிளறவும்.
பின்னர் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை
சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கவும். அடுத்து ஒரு டீஸ்பூன் மிளகாய்தூளையும்
சேர்த்து கிளறவும்.
இறுதியாக வேகவைத்த பாஸ்தாவை இதனுடன்
சேர்த்து நன்கு மசாலாவுடன் மிக்ஸ் செய்யவும்.
நன்கு மிக்ஸ் ஆகியவுடன் அடுப்பில்
இருந்து இறக்கி ஒரு பவுலில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.
இப்பொது சுவையான மசாலா பாஸ்தா ரெடி!
இதன் முழுமையான செய்முறையை கீழே இணைப்பில்
உள்ள வீடியோவை பார்க்கவும்.
#மசாலாபாஸ்தா #MasalaPastha
No comments:
Post a Comment