Monday, 20 July 2020

சென்னா மசாலா


சுவையான சென்னா மசாலா செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டக்கடலை – 250 கிராம்
தக்காளி – 4
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 5 பல்
பெரிய வெங்காயம் – 2
சீரகத்தூள் – ஒரு டீ ஸ்பூன் 
மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼  டீ ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீ ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன்
ஏலக்காய் – 2
கிராம்பு -2
பட்டை – சிறிதளவு
பிரிஞ்சி இலை – 1
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்துவிடவும்.
ஊறிய கொண்டைக்கடலையை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

வெந்த கொண்டக்கடலையில் சிறிதளவு எடுத்து மிக்சியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து கடாய் நன்கு சூடு ஏறியதும், அதில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் ஊற்றவும்.
அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து அதையும் நன்கு வதக்கிக்கொள்ளவும்.
இதில் நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
அடுத்து சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

மசலா கருகிவிடாமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்.
நன்கு வதக்கிய பின்னர் சிறிது நேரம் ஆறிய பிறகு மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

மீண்டும் புதிய கடாயில் மூன்று ஸ்பூன்கள் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை,ஏலக்காய்  இவற்றை போட்டு இதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை நன்றாக கிளறிவிடவும்.

பின்னர் அரைத்து வைத்த சென்னாவையும் சேர்க்கவும். இதை சேர்ப்பதால் திக்கான கிரேவி நமக்கு கிடைக்கும். இதில் ஊற வைத்து வேக வைத்த சென்னாவை நீருடன் அப்படியே சேர்த்து கிளறவும்.

சுவைக்கேற்ற அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பவுலில் மாற்றி, மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவவும்.

இப்போது சுவையான சென்னா மசாலா ரெடி!.



செய்முறையை கீழே இணைப்பில் உள்ள வீடியோவில் பார்க்கவும்.

  


#சென்னாமசாலா #ChanaMasala 

No comments:

Post a Comment