Thursday, 23 July 2020

மணத்தக்காளி கீரை சூப்

மணத்தக்காளி கீரை சூப்

 

தேவையான பொருட்கள்:

மனத்தக்காளி கீரை – ஒரு கட்டு

தேங்காய்ப் பால் – ஒரு கிளாஸ்

அரசி கலைந்த தண்ணீர் – இரண்டு கிளாஸ்

தக்காளி – 1

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 5 பல்

மிளகுத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

சீரகத்தை நன்கு பொரித்து வரும்போது பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.

இதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

பிறகு இதன் கூட கீரையை சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.

கீரை நன்கு வதங்கியதும் அரிசி கலைந்த நீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும், இதில் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

கீரை நன்கு வெந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிளகுத்தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது ஸ்டவ்வை ஆப் செய்து இரண்டு நிமிடங்கள் கழித்து சூடு ஆறியதும் தேங்காய் பாலை சேர்க்கவும்.

சுவையான மணத்தக்காளி சூப் ரெடி!

இதை அப்படியே சூப்பாகவும் சாப்பிடலாம், ரசத்திற்கு பதில் சூடான சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இதன் விரிவான செய்முறை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.



#மணத்தக்காளிகீரைசூப்    #ManathakkaliKeeraiSoup


Wednesday, 22 July 2020

கடலைமாவு ‘கடப்பா’


கடலைமாவுகடப்பா

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பட்டை, கிராம்பு – 2
சோம்பு – ½  டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கருவேப்பில்லை – சிறிதளவு
தக்காளி – 2

செய்முறை:

தக்காளியை கொதிக்கும் வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து அதன் தோலை உரித்து கைகளால் நன்கு மசிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடலைமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இது திக்காகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் கலக்கவும்.
ஒரு கடாயை ஸ்டவில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவிட்டு பட்டை,கிராம்பு, சோம்பு போட்டு நன்கு பொரியவிட்டு இதில்ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, கருவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தை சேர்த்து ‘லேசாக’ வதக்கிக்கொள்ளவும். ரொம்பவும் வதக்கிட வேண்டாம்.

இதில் மசித்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து லேசாக வதக்கிக்கொள்ளவும், பின்னர் இதில் கரைத்து வைத்த கடலைமாவு கரைசலை ஊற்றி இரண்டு நிமிடங்கள் கலக்கவும்.

பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூளை சேர்த்து கலக்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
கொதிக்க கொதிக்க கடலைமாவு திக்காக ஆகிவிடும். அப்போது மேலும் தண்ணீர் சேர்த்து நமக்கு தேவைப்படும் பக்குவத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கிவிடவும்.

இப்போது சூடான, சுவையான கடப்பா ரெடி!

இதை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

இதன் விரிவான செய்முறை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்




#கடலைமாவுகடப்பா  #GramFlourRecipe

Tuesday, 21 July 2020

சீரக சம்பா மட்டன் பிரியாணி


சீரக சம்பா மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மட்டன் – ¾ கிலோ
சீரக சம்பா அரிசி - – ¾ கிலோ
தக்காளி – 4
பிரியாணி இலை – 3
பட்டை,கிராம்பு & ஏலக்காய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 6 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
அரைத்த தக்காளி விழுது – 2
பச்சை மிளகாய் – 8
வெங்காயம் – 4
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
அரைத்து வைத்த (இரண்டு)வெங்காய விழுது –  ஒரு கப்
தயிர் – ½ கப்

செய்முறை:

மட்டனை குக்கரில் நான்கு விசில் வரும் வரையில் வேகவைத்துக்கொள்ளவும்.

சீரக சம்பா அரிசியை இருபது நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.
குக்கரில் 50ml ரீபைண்ட் ஆயில், 50ml நெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை,கிராம்பு & ஏலக்காயை போட்டு நன்கு பிரை ஆனதும் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதங்கும் பொழுது அரைத்து வைத்த வெங்காய விழுதையும் சேர்த்து கிளறி பின்னர் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி, அரைத்து வைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் நன்றாக கிளறி  விடவும்.

பிறகு பாதியளவு புதினா, பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும், இதனுடன் கொத்தமல்லி தழை புதினாவை சேர்க்கவும்.
இதில் வேக வைத்த மட்டனை சேர்த்து மசாலாவுடன் நன்கு கிளறிவிடவும்.

மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி வதக்கவும்.
பின்னர் அரை கப் தயிரை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி வதக்கிவிடவும்.

ஒரு கப் அரிசிக்கு ஒன்றை கப் தண்ணீரை சேர்க்கவும். தண்ணீருக்கு பதில் கறி வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்திக்கொண்டால் டேஸ்ட் நன்றாக இருக்கும், வேக வைத்த தண்ணீர் தேவையான அளவு இல்லையெனில் மீதம் நல்ல தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் ஒரு முழு எலுமிச்சம்பழத்தின் சாறினை சேர்த்து கலந்துவிட்டு ஊற வைத்த அரிசியை போட்டு இதையும் நன்கு கலந்து ஒரு தட்டை போட்டு மூடி வைக்கவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து சாதம் நன்கு தளதளவென்று கொதிக்கும் போது குக்கர் மூடியை நன்கு மூடி வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிடவும்.

எழு நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து பார்த்தால் சுவையான மட்டன் பிரியாணி ரெடி!


இதன் விரிவான செய்முறை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.



#மட்டன்பிரியாணி  #MuttonBiryani

Monday, 20 July 2020

நுங்கு டெஸர்ட்

நுங்கு டெஸரட்

தேவையான பொருட்கள்:
நுங்கு – 15
பால் – ¼ கப்
சர்க்கரை – 8 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 3

செய்முறை:

முதலில் நுங்கின் தோலை உரித்துவிடவேண்டும்.
பின்னர் நுங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு விளிம்பு ஷார்ப்பாக உள்ள டம்பளரின் மூலம் நுங்கை கொத்து பரோட்டா கொத்துவது போல கொத்தவேண்டும். நுங்கு டைமண்ட் கல்கண்டு அளவிற்கு வரும்வரையில் கொத்தவேண்டும்.

பின்னர் இதில் கால் டம்பளர் பால், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.

இதை குளிர்சாதன பெட்டியில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளிர்ச்சியாக பரிமாற  நுங்கு டெஸரட் ரெடி!


இதன் விரிவான செய்முறை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.


கோபி 65 / காலிஃப்ளவர் 65


கோபி 65 / காலிஃப்ளவர் 65

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – இரண்டு டீஸ்பூன்
மைதா மாவு - ½ கப்
கார்ன் பிளவர் – ½ கப்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக சிறிது காம்புகளுடன் வெட்டிக்கொள்ளவும். காலிஃப்ளவரில் சிறிய புழுக்கள் இருப்பதால் வெந்நீரில் போட்டு நன்கு கழுவிக்கொள்ளவும்.

காலிஃப்ளவரை ஒரு பவுலில் போட்டு அத்துடன் அரை கப் மைதா, அரை கப் கார்ன் பிளவர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கஸ்தூரி மேத்தி, மிளகாய்த்தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து காலிஃப்ளவரில் முழுவதும் ஒட்டும்படி  ஒன்றாக கிளறிக்கொள்ளவும்.

பதினைந்து நிமிடம் கழித்து கடாயில் ரீபைண்ட் ஆயில் ஊற்றி நன்கு காய்ந்ததும் மசாலாவுடன் கலந்து வைத்த காலிஃப்ளவரை ஒவ்வொன்றாக ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வகையில் எண்ணையில்  போட்டு பிரை பண்ணவும். நன்கு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து கருவேப்பிலையை பொறித்து மேலே தூவி பரிமாறவும்.

சுவையான, மொறு மொறு கோபி 65 / காலிஃப்ளவர் 65 ரெடி!

செய்முறையை கீழே இணைப்பில் உள்ள வீடியோவில் பார்க்கவும்
. 


#கோபி65 #காலிஃப்ளவர்65

மசாலா பாஸ்தா

மசாலா பாஸ்தா

தேவையான பொருட்கள்:

பாஸ்தா – 250 கிராம்
தக்காளி – 4
வெங்காயம் – 2
சர்க்கரை – 2 டீஸ்பூன்
பூண்டு – 7 பல்
மைதா – 2
காஸ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் -
உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணையை சேர்த்துக்கொள்ளவும் பின்னர் அதில் பாஸ்தாவை போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தாக்காளி பேஸ்ட் செய்முறை:

ஒரு கடாயில்  ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய தக்காளியை வதக்கவும், இதில் மூன்று கஷ்மீரி மிளகாயை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வேகும் வரை இரண்டு நிமிடங்கள் கடாயை மூடி வைக்கவும்.

தக்காளி நன்கு வெந்தவுடன் ஆறியபின்னர் மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது தக்காளி பேஸ்ட் ரெடி!

கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு நன்கு சூடேறியதும் நன்கு பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும் அடுத்து பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து இரண்டும் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

பின்னர் இதில் இரண்டு டீஸ்பூன் மைதாவை சேர்த்து கிளறவும். அடுத்து அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டை சேர்த்து இதுகூட இரண்டு டீஸ்பூன் கஷ்மீரி மிளகயிதூளை சேர்த்து கிளறவும்.

பின்னர் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கவும். அடுத்து ஒரு டீஸ்பூன் மிளகாய்தூளையும் சேர்த்து கிளறவும்.
இறுதியாக வேகவைத்த பாஸ்தாவை இதனுடன் சேர்த்து நன்கு மசாலாவுடன் மிக்ஸ் செய்யவும்.

நன்கு மிக்ஸ் ஆகியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பவுலில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

இப்பொது சுவையான மசாலா பாஸ்தா ரெடி!

இதன் முழுமையான செய்முறையை கீழே இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும்.



#மசாலாபாஸ்தா #MasalaPastha

சென்னா மசாலா


சுவையான சென்னா மசாலா செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டக்கடலை – 250 கிராம்
தக்காளி – 4
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 5 பல்
பெரிய வெங்காயம் – 2
சீரகத்தூள் – ஒரு டீ ஸ்பூன் 
மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼  டீ ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீ ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன்
ஏலக்காய் – 2
கிராம்பு -2
பட்டை – சிறிதளவு
பிரிஞ்சி இலை – 1
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்துவிடவும்.
ஊறிய கொண்டைக்கடலையை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

வெந்த கொண்டக்கடலையில் சிறிதளவு எடுத்து மிக்சியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து கடாய் நன்கு சூடு ஏறியதும், அதில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் ஊற்றவும்.
அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து அதையும் நன்கு வதக்கிக்கொள்ளவும்.
இதில் நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
அடுத்து சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

மசலா கருகிவிடாமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்.
நன்கு வதக்கிய பின்னர் சிறிது நேரம் ஆறிய பிறகு மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

மீண்டும் புதிய கடாயில் மூன்று ஸ்பூன்கள் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை,ஏலக்காய்  இவற்றை போட்டு இதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை நன்றாக கிளறிவிடவும்.

பின்னர் அரைத்து வைத்த சென்னாவையும் சேர்க்கவும். இதை சேர்ப்பதால் திக்கான கிரேவி நமக்கு கிடைக்கும். இதில் ஊற வைத்து வேக வைத்த சென்னாவை நீருடன் அப்படியே சேர்த்து கிளறவும்.

சுவைக்கேற்ற அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பவுலில் மாற்றி, மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவவும்.

இப்போது சுவையான சென்னா மசாலா ரெடி!.



செய்முறையை கீழே இணைப்பில் உள்ள வீடியோவில் பார்க்கவும்.

  


#சென்னாமசாலா #ChanaMasala